காணி உரிமைகள் தொடர்பான சட்ட பயிற்சி – மடு-Photos
இன்றைய தினம் (15-05-2015) அன்று இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவானது மன்னார் மடு பிரதேச கிராமிய அபிவிருத்தி சங்க உறுப்பினர்கட்கு காணி சம்மந்தமான ஒரு நாள் சட்டப் பயிற்சி பட்டறை ஒன்றை மடு கிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தியிருந்ததது.
இப்பயிற்சி மடு மாவட்ட பிரதேச செயலரால் தலைமை தாங்கப்பட்டதுடன் சட்ட உதவி ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களால் சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் முப்பதற்கும் அதிகமாக கிராமிய அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் குறிப்பாக அரச காணி பெற்றுக்கொள்ளவதற்கான படி முறைகள், மேன்முறையீட்டு படிமுறை மற்றும் தனியார் காணி தொடர்பான சட்ட விளக்கங்கள் என்பவற்றை பெற்றுக் கொண்டனர்.
மேலும் சுமார் காலை 10 மணியளவில் ஆரம்பிக்கபட்ட இப்பயிற்சி பட்டறை பிற்பகல் 03 மணியளவில் றிறைவுக்கு வந்ததுடன் தமக்குள்ள காணிப்பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்கங்கள் என்பவற்றுக்கான சட்டரீதியான விளக்கங்களை கலந்து கொண்டோர் சட்டத்தரணிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் ஓர் அரிய வாய்ப்பாக அமைந்திருந்நது.
நிகழ்வின் புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
காணி உரிமைகள் தொடர்பான சட்ட பயிற்சி – மடு-Photos
Reviewed by NEWMANNAR
on
May 15, 2015
Rating:
No comments:
Post a Comment