தலைமன்னார்- இராமேஸ்வர கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரத்தின் பிரதிநிதியான கொலம் அபாஸ் இந்தக் கோரிக்கையை இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் விடுத்துள்ளார்.
இலங்கையில் நல்லெண்ண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் திரும்பிவரத் தொடங்கியுள்ளனர்.
இதன் அடிப்படையில் இந்த வாரத்தில் 60 அகதிகள் வரை இலங்கை வந்துள்ளனர்.
எனினும் இவர்கள் அதிக செலவில் விமானத்திலேயே அழைத்து வரப்பட்டனர்.
இதனை தவிர்த்து அதிகளவில் அகதிகள் இலங்கை வரும்போது அவர்களை கப்பலில் ஏற்றி வருவதே உசிதமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைமன்னார்- இராமேஸ்வர கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
May 15, 2015
Rating:
.jpg)
No comments:
Post a Comment