அண்மைய செய்திகள்

recent
-

ரணில், ரவி,ஜோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து மன்றை கலைப்போம் : சரத்குமார


பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத்குமார குணரத்ன தெரிவித்துள்ளார். புண்ணியத்தினால் பிரதமராகி 40 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ரணில் விக்ரமசிங்க நடத்தும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவென மஹிந்த ராஜபக்ஷ ஆதரவுக் குழுவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். நீர்கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில் மஹிந்தவுடன் மீண்டும் மீண்டெழுவோம் என்ற கோஷத்திற்கு நாடு முழுவதும் வரவேற்பு காணப்படுகின்றது. அதானல் அதனை அனைவரும் ஏற்க வேண்டும். இந்நிலையில் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, ரவி கருணநாயக்க ஆகியோர் மீது தற்போது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்துள்ளோம். அந்தவகையில் விரைவில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவோம். இவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதன் மூலம் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளோம். புண்ணியத்தினாலேயே ரணில் விக்ரமசிங்க பிரதமராகியுள்ளார். 40 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து நடத்தும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவென மஹிந்த ராஜபக்ஷ ஆதரவுக் குழுவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர் என்றார். 

ரணில், ரவி,ஜோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து மன்றை கலைப்போம் : சரத்குமார Reviewed by Author on May 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.