அண்மைய செய்திகள்

recent
-

அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமாயின் சர்வதேச நாடுகளின் உதவி அவசியம் ஜோன் கெரியிடம் தமிழ்; கூட்டமைப்பு வலியுறுத்து


நாட்டில் அரசியல் தீர்வொன்று ஏற்பட வேண்டுமாயின் சர்வதேச நாடுகளின் உதவி அவசியமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் வலியுறுத்தியுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த செயலாளர் ஜோன் கெரி தனது பயணத்தின் இறுதிநாளான நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தார். இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நேற்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சேனாதிராஜா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் ஜோன் கெரியுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பு மூடிய அறைக்குள் இடம்பெற்றது. இதன்போது கூட்ட மைப்பினர் பகிரப்பட்ட இறைமை யடிப்படையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று அவசியமென்பதனை கெரியிடம் சுட்டிக்காட்டியதாக கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தினகரனுக்குத் தெரிவித்தார். இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தேவை. இந்த அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுவது மாத்திரமன்றி உடன் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவும் வேண்டும்.

மேலும் இந்த அரசியல் தீர்வை ஏற்படுத்த சர்வதேச நாடுகளின் உதவி அவசியமென்றும் கூட்டமைப்பு, கெரியிடம் தெரிவித்ததாக சுரேஷ் எம்.பி. கூறினார். இதேவேளை இனங்களிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமாயின் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வடுக்கள் தீர்க்கப்பட வேண்டுமென்று கூட்டமைப்பினர் கெரியிடம் சுட்டிக்காட்டினர். அத்துடன் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீளக்குடிய மர்த்தப்படுவது அவசியமென தெரிவித்த கூட்டமைப்பினர், மேலதிக இராணுவத்தினர் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டாலே மீளக்குடியமர்த்தல் பூரணப்படுத்தப்படு மெனவும் ஜோன் கெரியிடம் விளக்கமளித்திருந்தனர்.

 கூட்டமைப்பினரின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் செவிமடுத்த அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் வடக்கிலுள்ள மேலதிக இராணுவத்தின் வெளியேற்றம், மீள்குடியேற்றம் ஆகிய செயற்பாடுகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்குமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தை விடவும் தற்போதய அரசாங்கம் இனப்பிரச்சினை மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பில் ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்ட இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, இதற்கென நியமிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வுக் குழு அக்கறையுடன் செயற்பாடுகளை முன்னெடுக்குமென எதிர்பார்ப்பதாகவும் கூட்டமைப்பினரிடம் தெரிவித்திருந்தார்.


அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமாயின் சர்வதேச நாடுகளின் உதவி அவசியம் ஜோன் கெரியிடம் தமிழ்; கூட்டமைப்பு வலியுறுத்து Reviewed by Author on May 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.