அண்மைய செய்திகள்

recent
-

புத்தர் கொள்கையை பின்பற்றினால் யுத்தம் இல்லாமல் போகும் - மோடி


புத்தர் பிறந்த நேபாளம் துயரத்தில் சிக்கியுள்ளது. அம்மக்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி டில்லியில் நடந்த புத்த பு+ர்ணிமா நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். முன்னதாக நிலநடுக்கத்தால் உயிரிழந்த நேபாள மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: புத்தர் பிறந்த நேபாளம் நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களின் கவலையை போக்கிட நாம் எப்போதும் துணை நிற்போம். எல்லா உதவிகளையும் செய்வோம். நேபாளத்திற்கு இடர் வரும் போதெல்லாம் இந்தியா துணை நின்றுள்ளது. புத்தர் கொள்கை நமக்கு கவலையில் இருந்து வெளியே வருவதை உணர்த்துகிறது. நேபாள மக்கள் கவலையை துறந்து விரைவில் மீள வேண்டும். புத்தர் கொள்கையை பின்பற்றினால் யுத்தம் இல்லாமல் போகும். புத்தர் போதனைகள் வளத்திற்கு துணையாக நிற்கும். புத்தரின் பாடங்களே ஒருவரை உலக தலைவராக்க முடியும் புத்தர் மக்களின் ஒற்றுமையில் மிக அக்கறை கொண்டவராக இருந்தார். சொகுசு வாழ்க்கையை உதறிவிட்டு, துறவறத்தை ஏற்கும் மன தைரியம் புத்தரிடம் இருந்தது. புத்தரை குறிப்பிடாமல் ஆசியாவின் 21 ம் நூற்றாண்டு வரலாறு முழுமை பெறாது. நன்மையையும் தீமையையும் பகுத்தறிந்து உணரும் தன்மை பெற்றவராக புத்தர் இருந்தார். நாம் அனைவரும் புத்தர் கொள்கையை பின்பற்ற வேண்டும்.
புத்தர் கொள்கையை பின்பற்றினால் யுத்தம் இல்லாமல் போகும் - மோடி Reviewed by Author on May 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.