
சிறுவன் ஒருவனை தலையில் தாக்கிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் தம்மால் பிடிக்கப்பட்ட இரு சிறுவர்களுக்கு குறிப்பிட்ட சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள அதேயளவான காயத்தை தலையில் ஏற்படுத்தி ஐ.எஸ். தீவிரவாதிகளால் தண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்படி தீவிரவாதிகளின் கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்ற தண்டனை நிறைவேற்றக் கொள்கையின் பிரகாரம் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈராக்கிய நகரான மொசூல் நகரைச் சேர்ந்த தண்டனை நிறைவேற்றத்திற்குள்ளான இரு சிறுவர்களும் குறிப்பிட்ட சிறுவனின் தலையில் தாக்கி அவனைக் காயப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அந்த சிறுவர்கள் இருவரையும் பிடித்த ஐ.எஸ். தீவிரவாதிகள், பாதிக்கப்பட்ட சிறுவனின் தலையில் ஏற்பட்ட காயத்தை அளவுகோலால் அளந்து அதே அளவான காயத்தை குற்றச்சாட்டுக்குள்ளான சிறுவர்கள் இருவரது தலையிலும் ஏற்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment