அண்மைய செய்திகள்

recent
-

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்து மன்னார் பாடசாலைகளின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-photos

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கடத்தப்பட்டு பாலியல் வண்புனர்வுக்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையினை கண்டித்து மன்னார் நகரில் உள்ள பிரபல பாடசாலைகள் இரண்டின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று செவாய்க்கிழமை (19) காலை மேற்கொணடனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

பாடசாலையில் கல்வி கற்கும் மாணவ,மாணவிகள் பாடசாலைக்கு முன் ஒன்று கூடி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பாடசாலையில் இருந்து சிறிது தூரம் ஊர்வலமாக பாததைகளை ஏந்தியவாறு வித்தியாவின் மரணத்திற்கு நீதி கோரி கோசங்களை எழுப்பியவாறு சென்றனர்.

பின் மாணவர்கள் மீண்டும் பாடசாலையை சென்றடைந்தனர்.பாடசாலைக்கு முன்பாக உயிரிழந்த வித்தியாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இதன் போது குறித்த பாடசாலையை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணியளவில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலைக்கு முன் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மாணவிகள் மற்றும் ஆசிரியர்;கள் பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.பாடசாலைக்கு முன் ஆரம்பமான ஊர்வலம் மன்னார் வைத்தியசாலை வீதியூடாக சென்று மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.பின் பாடசாலைக்கு முன்பாக உயிரிழந்த  மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த இரு பாடசாலை மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களின் போது வித்தியாவின் மரணத்திற்கு நீதி கோரியும்,கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு அதி கூடிய தண்டனை வழங்கக்கோரியும்,குறிப்பாக குற்றவாளிகள் சார்பாக சட்டத்தரணிகள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகக்கூடாது எனவும் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளது.

குறித்த ஊர்வலத்தில் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வட மாகாணசபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,நானாட்டான் பிரதேச சபையின் முன்னால் தலைவர் அன்புராஜ் லெம்பேட்,மன்னார் நகர சபையின் முன்னால் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நகர சபையின் முன்னால் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

















புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்து மன்னார் பாடசாலைகளின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-photos Reviewed by NEWMANNAR on May 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.