மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு : உறவினர்கள் அதிர்ச்சியில்..!
திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது, யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலசுப்பிரமணியன்-வேணி ஆகியோரின் திருமணம் சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள முருகன் கோயில் ஒனறில் இன்று காலை நடைபெற்றது.
இதன்போது மணமகளின் பெற்றோர் தாம்பாள தட்டில் வைத்து தாலியை தொட்டு மணமகனிடம் எடுத்துக்கொடுக்குமாறு, சுப்பிரமணியின் சுவாமியிடம் கொடுத்தனர். தாலியை பெற்றுக் கொண்டு கையில் வைத்தபடி, கண்களை மூடிக் கொண்டு இறைவனிடம் வேண்டிக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, பின்னர் தாலியை மணமகனிடம் கொடுப்பதற்கு பதிலாக அவரே மணமகள் கழுத்தில் கட்டுவதற்காக கொண்டு சென்றார்.
இதன்போது, அருகில் இருந்த சந்திரலேகா பதற்றத்தோடு, சுப்பிரமணியன் சுவாமியை கையை தட்டி தடுத்ததோடு, மணமகனிடம் தாலியை கொடுக்குமாறு சொன்னார்.
இததன் பின்னரே தன்னை சுதாரித்துக் கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, மணமகனிடம் தாலியை கொடுத்தார். இதைத் தொடர்ந்து மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.
இச் சம்பவத்தால் மணமகள் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதோ இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு : உறவினர்கள் அதிர்ச்சியில்..!
Reviewed by Author
on
May 20, 2015
Rating:
Reviewed by Author
on
May 20, 2015
Rating:

No comments:
Post a Comment