20 ஆவது கிராண்ட்ஸ்லாமை செரீனா வெல்வார்
உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் தனது 20ஆ-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா தெரிவித்துள்ளார்.
இதுவரை ஒற்றையர் பிரிவில் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் செரீனா வில்லியம்ஸ், எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகும் பிரெஞ்சு ஓபனில் களமிறங்கும் நிலையில், நவரத்திலோவா மேலும் கூறியிருப்பதாவது:
செரீனா ஒரு வியக்கத்தக்க வீராங்கனை. நிச்சயம் அவர் தனது 20-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார். 30 வயதைக் கடக்கும்போது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வெல்வது கொஞ்சம் கடினம்தான். ஆனால் செரீனாவுக்கு சவால் அளிக்கும் வகையில் புதிய தலைமுறை வீராங்கனைகள் இல்லை.
அதனால் செரீனாவுக்கு இப்போதும் வாய்ப்பு இருக்கிறது. இப்போது ஏராளமான சிறந்த வீராங்கனைகள் இருந்தாலும், அவர்கள் யாராலும் செரீனாவுக்கு சவால் அளிக்க முடியவில்லை.
அதிக கிராண்ட்ஸ்லாம் (24) வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை செரீனா முறியடிக்க வாய்ப்புள்ளது என்றார்.
20 ஆவது கிராண்ட்ஸ்லாமை செரீனா வெல்வார்
Reviewed by Author
on
May 23, 2015
Rating:
Reviewed by Author
on
May 23, 2015
Rating:

No comments:
Post a Comment