

இந்த மண்ணில் தான் நம் உயிர்வாழ்க்கை அடங்கியி ருக்கிறது.
புதிய உலகம் அல்லது கிரகம் ஒன்றைக் கண்ணை மூடிக்கொண்டு கற்பனை செய்யுங்கள். அங்கே பருவகாலங்கள் தவறுவதில்லை. நன்னீர் இழக்கப்படுவதே இல்லை. நோய் எதிர்ப்பு மருந்துகளை வீரிய மற்றுப்போகச் செய்யும் எதிர்த் தாக்கங்கள் இல்லை. யாருக்கும் தொப்பை என்ற பிரச்சினயே கிடையாது. பயங்கரவாதமே இல்லை. போர் என்றாலும் என்னவென்றே தெரியாது.
அப்படியானால் அங்கு நமக்குப் பெரிய ஆபத்து எதுவும் ஏற்படாது அல்லவா? மன்னிக்கவும், மேலே சொன்ன அத்தனை நல்ல அம்சங்களும் அந்தக் கிரகத்தில் இருந்தாலும் மிக அற்பமானது என்றும் அவசியமற்றது என்றும் நீங்கள் நினைக்கும் ‘அந்தப் பொருள் தான்’ மிகவும் முக்கியமானது.
முக்கியமான அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்றால் நம் காலடியில் இருக்கிறது. ஆம்! அது மண்தான். இதுபற்றி பத்திரிகைகளில் ஏன் ஏதும் வருவதில்லை என்றால், ‘இது ஒன்றும் அவ்வளவு முக்கியமானது அல்ல’ என்றே பத்திரிகையாளர்கள் கருது கின்றனர்.
ஆனால், எல்லா மனித உயிர்களும் இதை நம்பித் தான் இருக்கின்றன. நீண்ட காலத்துக்கு முன்னரே நமக்கு இது தெரியும். ஆனால், அதை மறந்துவிட்டோம். கி. மு. 1500 இல் எழுதப்பட்ட சம்ஸ்கிருத ஸ்லோகம் இதைத் தெரிவிக்கிறது.
‘கைப்பிடியளவு உள்ள இந்த மண்ணில் தான் நம் உயிர்வாழ்க்கை அடங்கியிருக்கிறது. இதைக் கவனமா கக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். நம் முடைய உணவை, எரிபொருளை, நம்முடைய வீட்டை இது பாதுகாக்கும்,. நம்மைச் சூழ்ந்து நின்று நம்முடைய வசிப்பிடத்துக்கே தனி அழகைக் கொடுக்கும். இதைப் பராமரிக்காமல் உதாசீனப்படுத்தினால் அழிந்துவிடும். அத்துடன் மனித குலமும் தான்’
மண்ணைப் பற்றி இப்படித்தான் அந்த ஸ்லோகம் தெரிவிக்கிறது.
நூற்றாண்டுகள் பல கடந்தும் இய ற்கை மாறி விடவில்லை. ஆனால் நாம் மாறிவிட்டோம். உலகம் முழு வதும் உள்ள நில உடைமையாளர்கள் தங்களுடைய நிலத்து மண்ணைச் சாரமற்றுப் போகச் செய்வதில் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டி ருக்கின்றனர். புவியில் உள்ள இந்த மண்ணில் இன்னும் 60 ஆண்டுக ளுக்குத்தான் பயிர்கள் விளையும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வேளாண் அமைப்பு எச்சரிக்கிறது.
வெப்பமண்டல நாடுகளில் பெய்வதைப் போல அதிவேகமாக மேல் மண்ணைக் கரைத்துக்கொண்டு ஓடும் மழை ஏதும் இல்லாவிட்டாலும் பிரிட்டனில் இதே நிலைமை நீடித்தால் இன்னும் 100 அறுவடைகளுக்குத் தான் மண் தாக்குப் பிடிக்கும் என்று விவசாயி களுக்கான அறிவியல் வார இதழ் எச்சரிக்கிறது.
உலகம் முழுக்க உள்ள நில உடை மையாளர்கள் மண்ணைக் கொல்வ தில் போட்டி போட்டுக்கொண்டு செயல் படுகின்றனர். உலகில் உள்ள அனை வருக்கும் உணவு தானியம் வழங்க வேண்டும் என்றால், ஒவ்வோராண்டும் புதிதாக மேலும் 60 இலட்சம் ஹெக் டேர் (148 லட்சம் ஏக்கர்) விளை நிலங்கள் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
ஆனால் 120 இலட்சம் ஏக்கர் நிலங்கள் ஆண்டுதோறும் மண் சாரமிழப்பதால் வீணாகி வருகின்றன. மண்ணை நாச மாக்குகிறோம். அதைப் பற்றிக் கவ லைப்படாமல் புதிய விளைச்சல் நிலங்களுக்காகவும் நிலத் தேவைக ளுக்காகவும் மழைக் காடுகளையும் இதர உயிர்களில் அரிய வாழிடங்க ளையும் அழித்துக்கொண்டிருக்கிறோம்.
மண் என்பது அற்புதமான மாயப் பொருள். அது தன்னில் விழுவனவற் றைக் காப்பாற்றி, செழிக்கச் செய்து தாவரங்களுக்குப் பயன்படத்தக்க வகையில் மாற்றித் தருகிறது. கைப்பிடி மண்ணில் கோடிக் கணக்கான நுண்ணு யிரிகள் இருப்பதை ஆசிரியர்கள் தங் களுடைய மாணவர்களுக்குக் கற்றுத் தந்து, அதைப் பாதுகாத்து வாருங்கள் என்று அறிவுறுத்தினார்கள். ஆனால் நாமோ அதை வெறும் அழுக்காகவே கருதி அலட்சியப்படுத்திக்கொண் டிருக்கிறோம்.
உலகுக்குச் சோறூட்ட நாம் கண்டுபிடித்த தொழில் நுட்பங்கள் யாவும் நம்மைப் பட்டினி போட்டுச் சாகடிக்கும் ஆபத்துகளைக் கொண்டதா கவே இருக்கின்றன. மானுடர்களின் காலம் (ஆந்த்ரோபோசின்) எது என்பதை ஆராயும் பத்திரிகை ஒன்று. 11 வது நூற்றாண்டில் பிரெஞ்சு எரியிலிருந்து எடுக்கப்பட்ட, அதிக பாதிப்புகளைச் சந்திக்காத வண்டலைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கடந்த நூற் றாண்டில் மட்டும் தீவிர விவசாயச் சாகுபடி முறைகளின் மூலம் மண் பாதிப்பு 60 மடங்கு அதிகமாகிவிட்டது என்று கூறுகிறது.
சிறு நகரங்களிலும் பெரு நகரங்களி லும் விவசாய நிலமாக அல்லாமல் பலருடைய வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப்புறங்களிலும் செடி, கொடிகளை வைத்துப் பராமரித்துவரும் மண்ணை எடுத்து ஆராய்ந்தவர்கள், விவசாய நிலங்களில் இருப்பதைவிட இந்த மண்ணில் இயற்கையான கரி மூன்றில் ஒரு பங்கு அதிகமாகவும், நைட்ரஜன் 25 வீதம் அதிகமாகவும் இருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். இதனால், வழக்கமான பண்ணை நிலங் களாக இல்லாமல் வேறு இடங்களில் புதிய வேளாண்மை செய்கிறவர்கள் ஒரு ஹெக்டேரில் 4 மடங்கு முதல் 11 மடங்கு வரையிலும் கூட அறுவடை காண்கிறார்கள்.
மண் வளமாக இருக்க வேண்டும் என்ற அக்கறை மற்றவர்களைவிட விவசாயிகளுக்கு அதிகம் அல்லவா?’ என்பது உண்மை தான். மிகச் சிறந்த விவசாயிகள் தங்களுடைய மண் வளமாக இருக்க இயற்கையான வழிமுறைகளை அக்கறையுடன் கையாள்கிறார்கள். அதே சமயம், மோச மான விவசாயிகளும் இருக் கிறார்கள். அவர்களில் பலர் நேரடியாக விவசாயம் செய்யாமல் குத்தகைக்கு மற்றவர்களிடம் கொடுத்து அல்லது ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமித்து குறைந்த காலத்தில் அதிக இலாபம் எடுக்க விவசாயம் செய்கி றார்கள்.
அவர்கள் அதிக விளைச்சலுக்கு உதவக் கூடியவை என்று கூறப்படும் இரசாயனங்களையும் பூச்சி கொல்லி களையும் உரங்களையும் பயன்படுத்தி மண்ணின் நுண்ணுயிரிகளைக் கொன்று மண்ணை நாசப்படுத்துகிறார்கள். நல்ல விவசாயிக்ள கூட பொருளாதார, அரசியல் முறைமைகள் காரணமாக தாங்கள் விரும்பியபடி இயற்கை விவசாயம் செய்ய முடியாமல் மற்றவர்களைப் பின்பற்றும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
உணவு தானியங்களுக்குப் பற்றாக் குறை ஏற்பட்டு விடக்கூடாது. அதிக விளைச்சல் தரும் ரகங்களைப் பயிரி ட்டுச் சாகுபடியைப் பெருக்க வேண்டும் என்ற குறுகிய கால இலட்சியம், மண்வளம் உள்ளிட்ட இயற்கை அம்சங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொன்றுவிடு கிறது. இதைப் பற்றிப் பேசாததுதான் மிகப் பெரிய சமூக மெளனமாகத் தெரிகிறது.
இயற்கைச் சீரழிவுகளால் நாம் பெரிதும் பாதிக்கப்படாமலிருக்கக் கிடைத்த வாய்ப்புகளால் நமக்கு உணவு, தண்ணீர் எல்லாம் கூடத் தேவையில்லை என்ற பரிபக்குவ நிலையை அடைந்துவிட்டதைப் போல நடந்துகொள்கிறோம். மண்ணின் சாரத்தைக் காப்பதற்காக மீண்டும் கலப்பையைக் கொண்டு உழ முடியாது என்பது உண்மை தான் என்றாலும் வேறு வகைகளில் மண்ணின் வளத்தைக் காப்பாற்றலாம். உழாமலேயே விவசாயம் செய்யும் சோதனைகளில் கூட உலகின் பல பகுதிகளில் விவ சாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கான பலனும் வழக்கத்துக்கு மாறாக அதிகமாகவே இருக்கிறது. இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுத்தக் கூடிய பண்ணைத் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் கூட பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் தயக்கம் நிலவுகிறது. நீண்ட காலத்துக்கும் தொடரக்கூடியதும், தன்னிறைவை அளிக்கக்கூடியதுமான இயற்கையான பயிர்ச் செய்கை வழிமுறைகள் பல இருக்கின்றன.
செப் ஹொல்சர், ஜியாஃப் லாட்டன் ஆகியோர் காய்கறி, பழங்கள் சாகு படியில் இவற்றைக் கையாண்டு, சாத னைகளைப் படைத்துள்ளனர். ஆஸ்தி ரியாவில் ஆல்ப்ஸ் மலையின் 1.100 மீட்டர் உயரத்துக்கு மேலேயும் ஜோர்டான் பாலைவனத்திலும் இந்த வழிமுறைகள் நல்ல சாகுபடியை அளித்துள்ளன. ஆண்டுக்கு 45 கோடி பவுண்களை பயிர்ச் செய்கை ஆராய்ச் சிக்காக அரசு செலவிட்டாலும், அவை யெல்லாம் மண்ணை நாசப்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கே செலவாகின்றன.
குறுகிய காலத்தில் சாதனை படைத்துவிட வேண்டும். லாபம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் மாற்று முறைகளின் சாத்தியக்கூறுகளையும் சாதனைகளையும் பார்க்க மறுக்கின்றனர்.
No comments:
Post a Comment