மடு மாதா சுற்றுக்கிண்ணம்-நெடுங்கண்டல் அந்தோனியார் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.-Photos
மடு மாந்தை மேற்கு உதைப்பந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட மடு மாதா சுற்றுக்கிண்ணத்தின் இறுதி சுற்றுப் போட்டி பெரிய பண்டிவிரிச்சான் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம் பெற்றது.
இறுதி சுற்று போட்டி நெடுங்கண்டல் அந்தோனியார் விளையாட்டுக்கழகத்திற்கும் வேட்டயா முறிப்பு வள்ளுவர் கழகத்திற்குமிடையில் நடைபெற்றது.
இதன் போது நெடுங்கண்டல் அந்தோனியார் விளையாட்டுக்கழகம் கழகம் 3-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று சுற்றுக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமை தாங்கினார்.
அத்துடன் வடமாகாண உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலன், மாந்தைமேற்கு பிரதேச சபை தலைவர் வரப்பிரகாசம், அருட்தந்தை றஜனிக்காந், அருட்சகோதரர் விஐயதாசன், ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மடு மாதா சுற்றுக்கிண்ணம்-நெடுங்கண்டல் அந்தோனியார் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 03, 2015
Rating:
.jpg)
No comments:
Post a Comment