இன்று மட்டக்களப்பில் முழுமையான ஹர்த்தால்
புங்குடுதீவில் கொல்லப்பட்ட மாணவி வித்தியா கொலையில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், கொலையாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் முழுமையான ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் மட்டக்களப்பு வெறிச்சோடி காணப்படுகின்றன வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. மாநகரசபை சந்தையும் திறக்கப்படவில்லை.
இன்றைய போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி, அரச மற்றும் தனியார் போக்குவரத்துதறையும் சேவையில் ஈடுபடவில்லை. இதனால் பேரூந்து நிலையம் வெறிச்சோடிப் போயுள்ளது. தூர இடங்களிலிருந்து வந்து செல்லும் பேரூந்துகள் மாத்திரமே, பேரூந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன.
பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள் என்பன நடக்கவில்லை. வங்கிகள் திறக்கப்பட்டுள்ள போதும், அங்கு மக்கள் நடமாட்டத்தை காண முடியவில்லை.
இன்று மட்டக்களப்பில் முழுமையான ஹர்த்தால்
Reviewed by NEWMANNAR
on
May 22, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 22, 2015
Rating:




No comments:
Post a Comment