வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை பொது இடத்தில் வழங்கப்பட வேண்டும்!- மடு இளைஞர் சம்மேளனம் வேண்டுகோள்
வித்தியாவின் கொலையின் தீர்ப்பு சம்மந்தமாக மடு பிரதேச இளைஞர் சம்மேளன தலைவரும், மன்னார் மாவட்ட இளைஞர் சம்மேளன அமைப்பாளருமான நடராசா ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வித்தியா படுகொலையுடன் தொடர்புடையவர்களை தமிழ் சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க எங்களது உணர்வுகளை புரிந்து கொண்டு உடனடியாக கைது செய்ததற்கு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதுடன், இனி இது போன்ற குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தமிழ் பெண்கள் மீது அக்கறை கொள்ள வேண்டும்.
என்றும் இக்குற்றத்தை புரிந்த இவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், அதுவும் பொது இடத்தில் நிறைவேற்ற வேண்டும். என்று ஒட்டுமொத்த தமிழர் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை பொது இடத்தில் வழங்கப்பட வேண்டும்!- மடு இளைஞர் சம்மேளனம் வேண்டுகோள்
Reviewed by NEWMANNAR
on
May 17, 2015
Rating:

No comments:
Post a Comment