திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டது.- Photo
இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக திருகோணமலையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை 17.05.2015 காலை 9.10 மணிக்கு சிவன் கோயிலடியில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு முன்னால் இது நிறைவேற்றப்பட்டது..
இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவரும். கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான சி.தண்டாயுதபாணி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண சபை திருகோணமலை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜெ.ஜனார்த்னன், முன்னாள் திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா, சி.நந்தகுமர். த.கௌரிமுகுந்தன், வெருகல் பிரதேச சபை முன்னாள் தலைவர் ச.விஜயகாந்த், ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர்.
தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் இதில் கலந்து கொண்டார்கள்.
திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டது.- Photo
Reviewed by NEWMANNAR
on
May 17, 2015
Rating:
No comments:
Post a Comment