அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபை பிரிவில் கடமையாற்றிய 11 சுத்திகரிப்பு பணியாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கி வைப்பு.-Photos

இவ்வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் கீழ் 180 நாற்கள் கடமையாற்றிய மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் 11 பேருக்கு நேற்று(15) வெள்ளிக்கிழமை மாலை நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் நேற்று(15) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் நியமனம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது மன்னார் நகர சபையில் 180 நாட்கள் கடமை புரிந்தவர்களை உள்வாங்கும் அடிப்படையில் 11 சுத்திகரிப்பு பணியாளர்களுக்கு இவ்வாறு நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் மன்னார் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.துரம்,மன்னார் நகர சபையின் செயலாளர் லெனாட் பிரிட்டோ,நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,மற்றும் நகர சபை உறுப்பினர்களான இரட்ணசிங்கம் குமரேஸ்,மெரினஸ் பெரேரா,செல்வக்குமரன்(டிலான்) ஆகியோர் இணைந்து குறித்த சுத்திகரிப்பு பணியாளர்கள் 11 பேருக்கு நிரந்தர நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.









மன்னார் நகர சபை பிரிவில் கடமையாற்றிய 11 சுத்திகரிப்பு பணியாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கி வைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on May 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.