கடலுக்குள் தடம்புரண்டது இ.போ.ச. பஸ் : 6 பேர் காயம்
காலி - ஹபராதுவ பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்று கடலுக்குள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பஸ் சாரதியின் தூக்க கலக்கமே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது விபத்துக்குள்ளான பஸ் வண்டியில் 25 பேர் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலுக்குள் தடம்புரண்டது இ.போ.ச. பஸ் : 6 பேர் காயம்
Reviewed by Author
on
May 06, 2015
Rating:

No comments:
Post a Comment