17 காதலிகளும் மருத்துவமனைக்கு பார்க்க வந்ததால் சிக்கிய இளைஞன்
சீனாவில் விபத்துக்குள் ளான இளைஞரை பார்க்க 17 காதலியர் வந்ததால் அவர் அனைவரையும் ஏமாற்றியிருப்பது அம்பல மாகியுள்ளது.
யுவான் என்று மாத்திரம் அடையாளப்படுத்தி இருக் கும் இந்த இளைஞன் சம காலத்தில் அனைத்து பெண்களுடனும் காதல் உறவு வைத்துள்ளார். அதில் ஒரு பெண்ணுக்கு குழந்தையும் இருப்பதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்த இளைஞன் கடந்த மாதம் விபத்துக்குள்ளானதை அடுத்து அவரது மருத்துவர் அனைத்து காதலிகளுக்கும் தகவல் அளித்துள்ளார். அனைத்து பெண்களும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால் தாம் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
"அவர் மருத்துவமனையில் இருப்பது தெரிந்து நான் அதிகம் கவலைப்பட்டேன்" என்று யுவானை 18 மாதங்களாக காதலிக்கும் 'pயோ லீ என்ற பெண் குறிப்பிட்டார். "ஆனால் மருத்துவமனையில் பல அழகழகான பெண்களை பார்த்தபோது அவர் மீது கவலைப்பட தோன்றவில்லை" என்றார்.
இதில் ஒரு பெண் யுவானை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்திருப்பதோடு மற்றொரு பெண் தொடர்ந்து பண உதவிகள் வழங்கிதாக சீன பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளனர். மோசடி குற்றச்சாட்டில் அந்த இளைஞன் மீது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
17 காதலிகளும் மருத்துவமனைக்கு பார்க்க வந்ததால் சிக்கிய இளைஞன்
Reviewed by Author
on
May 21, 2015
Rating:
Reviewed by Author
on
May 21, 2015
Rating:

No comments:
Post a Comment