அண்மைய செய்திகள்

recent
-

Basicare Nylon Bristle மேக்கப் பிரஷ் வகைகள் தற்போது விற்பனையில்


சிறப்பான முக ஒப்பனையை பெற விரும்பும் இலங்கையின் அதிநவீன பெண்மணிகளுக்கு தரமான மேக்கப் பிரஷ் வகைகள் அத்தியாவசியமாகும். தொழில்முறை ஒப்பனை பயன்பாட்டிற்கு ‘கட்டாயம்’ இருக்க வேண்டிய பிரஷ் வகையாக Basicare nylon Bristle தெரிவுகள் அமைந்துள்ளன. இந்த அதிநவீன மேக்கப் பிரஷ் வகைகள் தொழில்முறை ஒப்பனை கலைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், தினசரி ஒப்பனை கலைஞர்களுக்கும் சகாயமானதாக அமைந்துள்ளது. Basicare இன் nylon bristle பிரஷ் வகைகள் உயர் ரக சின்தெடிக் பைபர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் இந்த சின்தெடிக் பிரஷ் வகைகள் அதிகப்படியான மேக்கப்பின்றி ஒப்பனை செய்ய மிக ஏற்றதாகும். இந்த தூய்மையான பிரஷ்கள் ஒப்பனையின் போது நேர்த்தியை வழங்குகிறது. இந்த nylon hair பிரஷ் வகைகள் உங்கள் இயற்கையான நிறம் மற்றும் மேக்கப்புடன் ஒன்றிணைந்து ஆரோக்கியமான மற்றும் பொலிவான தோற்றத்தை பெற்றுக்கொடுக்கிறது. மிருதுவான மற்றும் நேர்த்தியான பூர்த்தியை பெற Basicare nylon பிரஷ் வகைகளை concealer, cream shadow, cream blush அல்லது cream foundationபோன்ற கிறீம் உற்பத்திகளுடன் பூசி பயன்படுத்தலாம். Basicare nylon bristle பிரஷ் வகைகளை சுத்தப்படுத்துவதும் எளிது. முறையான தூய்மைப்படுத்தல் மற்றும் சேமிப்புடன் இந்த பிரஷ் வகைகளின் பாவனையை பல ஆண்டுகள் நீடித்துக்கொள்ளலாம். இன்றே Basicare தொழில்முறை மேக்கப் பிரஷ் வகைகளை பயன்படுத்தி உண்மையான தயாரிப்பின் வித்தியாசத்தை கண்டுணருங்கள். சருமம் மற்றும் அழகு பராhமரிப்பு துறையில் இலங்கையில் பரந்தளவிலான அழகுசாதன பொருட்களை வழங்கிவரும் முன்னோடியான DermaCare (பிரைவற்) லிமிடெட் நிறுவனத்தின் மூலம் Basicare சந்தைப்படுத்தப்படுகிறது. My Chemist குழும நிறுவனங்களின் அங்கத்துவத்தைக் கொண்ட DermaCare (பிரைவற்) லிமிடெட் நிறுவனமானது கடந்த தசாப்தத்தில் பெற்ற அனுபவத்தின் ஊடாக உள்நாட்டு பாவனையாளர்களின் தேவைகளை நன்குணர்ந்துள்ளது. இந் நிறுவனமானது அழகுசாதனங்கள் பிரிவில் உலகளாவிய புதிய போக்குகளுக்கு ஏற்ப Basicare இன் புதுமையான உற்பத்தி தெரிவுகளை இலங்கையில் வழங்கி வருகிறது. பெண்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள Basicare இன் பவுண்டேஷன் பிரஷ் வகைகளை திரவ அல்லது கிறீம் பவுண்டேஷன்களை பூசுவதற்கு பயன்படுத்தலாம். பெண்களின் மேக்கப் பெட்டகத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய அழகுசாதன பொருளாக Basicare பவுண்டேஷன் பிரஷ் வகைகள் அமைந்துள்ளன. தம்மை சிறப்பாக காட்டிக்கொள்ள விரும்பும் பரபரப்பான பெண்களுக்கு பயன்படுத்த இலகுவான டு இன் வன் பவுண்டேஷன் மற்றும் கன்சீலர் பிரஷ் வகை மிகவும் பொருத்தமானது. இரட்டை பயன்பாட்டினை கொண்ட பிரஷ் வகைகள் நேர்த்தியாக மேக்கப்பினை போட உதவுகிறது. தட்டையான பிரஷ் வகைகள் கண்களுக்கு கீழுள்ள கருவளையம், புள்ளிகள் மற்றும் மருக்களை மறைக்கிறது. Basicare இன் Angled Eye shadow பிரஷ் மூலம் கவர்ச்சியான கண்களை உருவாக்கிக் கொள்ளலாம். compact bristles களைக் கொண்டு கண் இமைகளின் மீது துல்லியமாக வர்ணங்களை பூச முடிகிறது. இதனை கிறீம் அல்லது பவுடர் eye shadow உடன் பயன்படுத்துவது சிறந்தது. லிப் ஸ்டிக், லிப் க்ளொஸ் அல்லது லிப் பாம் போன்றவற்றை பூச கனகச்சிதமான Basicare இன் லிப் பிரஷ்களுடன் உங்கள் உதடுகளின் அழகினை மெருகேற்றிக் கொள்ளுங்கள். “மிகச்சிறந்த முக ஒப்பனையை பெற்றுக்கொள்ள விரும்பும் முன் அனுபவமற்ற மற்றும் தொழில்முறை ஒப்பனை கலைஞர்களுக்கு பொருத்தமான வகையில் Basicare இன் nylon bristle மேக்கப் பிரஷ் தெரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது இலங்கையின் நவீன பெண்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்புக்கு இணையான கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகிறது. DermaCare தெரிவுகள் Odel – Backstage, ஆர்பிகோ சுப்பர் சென்டர்கள் மற்றும் நாடுமுழுவதும் உள்ள அழகுசாதன கடைத்தொகுதிகளில் கிடைக்கின்றன” Basicare நிறுவனத்தின் பணிப்பாளர் சரத் ஜயசேகர தெரிவித்தார். ISO 9001:2000SGC சான்றிதழ் பெற்ற Basicare வர்த்தகநாமமானது Influx Industry Inc மூலம் கடுமையான தர கட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்கள், தொழிற்துறை வடிவமைப்புகள், சர்வதேச பாதுகாப்பு தேவைகளுக்கமைய உற்பத்தி செயல்பாடு மற்றும் பொதியிடல் ஆகியவற்றின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. Basicare உற்பத்திகள் பிரான்ஸ், பிரேசில், ரஷ்யா, USA, இந்தியா, கொரியா, தாய்வான், ஹொங்கொங், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட உலகம் முழுவதுமுள்ள 42 நாடுகளில் கிடைக்கின்றன.

Basicare Nylon Bristle மேக்கப் பிரஷ் வகைகள் தற்போது விற்பனையில் Reviewed by Author on May 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.