எதிர்வரும் நூறு ஆண்டுகளில் மனிதர்களை ரோபோக்கள் கட்டுப்படுத்தும் அபாயம்
எதிர்வரும் நூறு ஆண்டுகளுக்குள் மனிதர்களை ரோபோக்கள் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் வாய்ப்புள்ளதாக உலகப் புகழ்பெற்ற பிரித்தானிய பௌதிகவியலாளரான ஸ்டீவன் ஹவ்கிங் எச்சரித்துள்ளார்.
லண்டனில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நவீன மதிநுட்பம் தொடர்பான மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
செயற்கை மதிநுட்பமானது மனிதர்களின் முடிவுக்கு வழிவகை செய்யக் கூடும் என அவர் தெரிவித்தார்.
செயற்கை மதிநுட்பத்துடன் கூடிய ரோபோக்களின் உருவாக்கமானது அந்த செயற்கை மதிநுட்பத்தை யார் கட்டுப்படுத்துவது என்பதை விடவும் அந்த மதிநுட்பம் அனைத்தையும் கட்டுப்படுத்தும் நிலையை ஏற்படுத்த வழிவகை செய்வதாக அமையும் என அவர் கூறினார்.
அந்த வகையில் எதிர்வரும் நூறு ஆண்டுகளுக்குள் செயற்கை மதிநுட்பம் மனிதர்களை விஞ்சி அவர்களை கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்று விடும் என அவர் தெரிவித்தார்.
அவ்வாறான நிலை ஏற்படுகையில் செயற்கை மதிநுட்ப கணினிகள் எமது இலக்குகளையொத்த இலக்குகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டிய தேவை எமக்கு ஏற்படும் என அவர் கூறினார்.
மேற்படி செயற்கை மதிநுட்பம் குறித்து உரிய பாதுகாப்பை மேற்கொள்ளாவிட்டால் அது மனிதர்களை இருண்ட எதிர்காலமொன்றிற்கு இட்டுச் செல்வதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நூறு ஆண்டுகளில் மனிதர்களை ரோபோக்கள் கட்டுப்படுத்தும் அபாயம்
Reviewed by Author
on
May 14, 2015
Rating:
Reviewed by Author
on
May 14, 2015
Rating:

No comments:
Post a Comment