அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், தலைமன்னாருக்கான இரவுநேர தபால் ரயில் சேவை இரத்து


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னார் வரையான இரவுநேர தபால் ரயில் சேவை இன்று முன்னெடுக்கப்பட மாட்டாதென ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வட பகுதி ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் புனரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக இன்றைய தினம் தபால் ரயில் சேவைகள் இடம்பெறாதென ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர். ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன், தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி போக்குவரத்தில் ஈடுபடவுள்ள தபால் ரயில் சேவையும் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் கூறினார்.

இந்த தபால் ரயில் சேவைகள் நாளை முதல் வழமைபோன்று இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், தலைமன்னாருக்கான இரவுநேர தபால் ரயில் சேவை இரத்து Reviewed by NEWMANNAR on May 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.