வித்தியாவுக்கு நீதி வேண்டி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
புங்குடுதீவு மாணவியை வன்புணர்வின் படுகொலை செய்த குற்றவாளிகளை தண்டிக்குமாறு கோரி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வித்தியாவுக்கு எற்பட்ட இந்த கொடூரமான நிலைய எனிமேல் எந்த காலங்களிலும் இடம்பெறக்கூடாது. அதற்கு இலங்கையின் சட்டத்துறை வலுவாக இருக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சமாதானத்தை நோக்கி பயணிக்கும் இந்த வேளையில், மாணவிகளை இலக்கு வைக்கும் இவ்வாறான கொடுமையான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
கொலை செய்யப்பட்ட மாணவிக்கான தீர்ப்பு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன்போது குற்றவாளிகளுக்கு எதிராக எந்த சட்டத்தரணிகளும் ஆஜராகக்கூடாது என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வித்தியாவுக்கு நீதி வேண்டி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
May 21, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 21, 2015
Rating:


No comments:
Post a Comment