அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்


புங்குடுதீவு மாணவி வித்யா பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டமும் கையெழுத்து போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மஞ்சந்தொடுவாய் தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

இதன்போது பெண்களுக்கான பாதுகாப்பு கோரி, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.

மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில், "சட்டமும் நீதியும் யாரை பாதுகாக்கும், சிறுவர் துஷ்பிரயோகத்தை உடன் நிறுத்துங்கள்" என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை இவர்கள் தாங்கியிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், மாணவி வித்தியாவின் படுகொலையை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் எதிராக மக்கள் போராட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மதுபானசாலைகளை மூடும் அதிகாரம் அரச அதிகாரிகளிடம் இல்லை. பொதுமக்கள் நீங்கள் நினைத்தால் மதுபான கடைகளை மூட வைக்க முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காவியா பெண்கள் நிறுவனம், சிவில் பாதுகாப்பு குழுக்கள், தொண்டர் ஆர்வலர் நிறுவனங்கள் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தன.
மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் Reviewed by NEWMANNAR on May 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.