அண்மைய செய்திகள்

recent
-

5 வயது இளமையை சீரழித்த 60 வயது முதுமை : பிரதேச மக்களால் மடக்கி பிடிப்பு


5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 60 வயதுடைய முதியவர் ஒருவர் பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, புதிய காத்தான்குடி மூன்றாம் குறிச்சி தக்வா நகரில் வசித்து வரும் ஐந்து வயது சிறுமியொருவர் தனது அயல் வீட்டு பிள்ளைகளுடன் சென்று விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் வழமை போன்று நேற்று வியாழக்கிழமை பகல் அயலிலுள்ள குறித்த அந்த வீட்டுக்கு சென்ற சிறுமியை, அந்த வீட்டின் உரிமையாளரான 60 வயதுடைய முதியவர் அங்கு நின்ற மாமரத்தில் ஒரு மாங்காயினை பறித்து அந்த சிறுமிக்கு கொடுத்து சிறுமியை பயமுறுத்தி வீட்டின் கதவுகளை மூடி விட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுதி அழுது கூக்குரலிட்ட போது முதியவர் சிறுமிக்கு நூறு ரூபாய் பணத்தினை கொடுத்து யாரிடமும் நடந்த விடயத்தினை சொல்ல வேண்டாமென கூறி சிறுமியை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். வீட்டுக்குச் சென்ற சிறுமி அழுது கொண்டு நடந்த விடயத்தினை தனது தாயிடம் கூற, தாய் அயலவர்களை அழைத்து விடயத்தைக் கூறியுள்ளார். பின்னர் அயலவர்கள் ஒன்று திரண்டு குறித்த முதியவரை தேடி அவரின் வீட்டுக்குச் சென்ற போது முதியவர் வீட்டை மூடி விட்டு பின் கதவினால் ஓடிச் சென்று பாழடைந்த வீடொன்றுக்குள் ஒழிந்து நின்றுள்ளார். பின்னர் அவரை தேடிச் சென்ற அயலவர்கள் அவரை மடக்கிப்பிடித்து காத்தான்குடி பொலிஸாரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து சந்தேக நபரான முதியவரை காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5 வயது இளமையை சீரழித்த 60 வயது முதுமை : பிரதேச மக்களால் மடக்கி பிடிப்பு Reviewed by Author on May 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.