

முஸ்லிம்கள் மீது மியன்மாரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காடைத்தனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றைய தினம் ஜும்ஆ தொழுகையின் பின்னர் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் ரிசாத் பதியூதீன்,
மியன்மார் அரக்கர்களின் கொடூரத் தாக்குதல்களில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டும் நாடுகள் அனைத்தும் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றன. ஐ.நா சபை தூங்குகிறது.
இந்தக் கொலையினை கண்டித்து துருக்கி அரசாங்கம் மட்டுமே குரல்கொடுத்து வருகிறது. அதற்காக இலங்கை மக்கள் சார்பில் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனைய நாடுகள் அனைத்தும் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றன.
ஆகையினால், இந்தக் கொடூரத்துக்கு எதிராக உலக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்று திரள வேண்டும் என இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அதேபோல் இலங்கையிருள்ள மியன்மார் தூதரகத்துக்கும் எமது எதிர்ப்பினை தெரிவித்து மகஜர் கையளித்திருக்கிறோம்.
எனவே, இந்த அடாவடித்தனம், படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் மட்டுமல்ல, பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ மக்களும் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

அமைச்சர் றிசாத் பதியூதீன், மேல்மாகாண சபை உறுப்பினர்கள் முஜிபு ரஹ்மான், பைருஸ் ஹாஜி, தேசிய ஜக்கிய முன்னனியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் ஊர்வலமாகச் சென்று மியன்மார் தூதுவரிடம் கண்டன அறிக்கையை சமர்ப்பித்தனர்.
அத்துடன் தூதுவரலாயத்திற்கு முன்பாக அந்த நாட்டுக் கொடியும் எரிக்கப்பட்டது.
No comments:
Post a Comment