அண்மைய செய்திகள்

recent
-

வில்பத்து சரணாலய பகுதிக்குள் நுழைந்த பிக்குகள்- முசலியில் பதற்றம்(படங்கள் இணைப்பு)

சிஹல இராவணபலய மற்றும்  அமைப்புக்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான புத்த பிக்குகள் இன்று(14) வியாழக்கிழமை மாலை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மறிச்சிக்கட்டி மற்றும் வில்பத்து பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.

அப்பகுதிக்கு சென்ற பிக்குகள் அங்கு வெள்ளரசு மரங்களை நாட்டியுள்ளதோடு,வில்பத்து சரணாலயப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் காடழிப்புக்களை நிறுத்தக்கோரி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிக்குகள் 4 பஸ்களில் பொலிஸ் பாதுகாப்புடன் அப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,,,
 
பொலிஸாரின் பாதுகாப்புடன் அங்கு வருகை தந்த நூற்றுக்கனக்கான பிக்குகள் முசலியில் அரச மரக் கன்றுகளை சண்டித்தனமாக நாட்டினர்.

மன்னார் மாவட்டத்தின் வில்பத்து எல்லைக் கிராமமான சிலாவத்துறைப் பகுதியில் உள்ள மரிச்சிக்கட்டி, மேதரகம பகுதியை அண்டிய உப்பாறு உள்ளிட்ட கிராமப் பகுதியில் இன்று (14) வியாழக்கிழமை மாலை வருகை தந்த ராவணபலய உள்ளிட்ட குழுக்கள் சுமார்   நான்கு பேரூந்துகளில் சென்று அப்பகுதியைப் பார்வையிட்டதாகவும் இதன் காரணமாக அப்பகுதி மக்கள்  அச்சத்தில் காணப்பட்தாக அங்கிருக்கும் மீள் குடியமர்ந்துள்ள மக்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு வந்தவர்கள் அப்பகுதி மக்களுடன் எந்த விதச் சந்திப்புக்களையும் மேற்கொள்ள வில்லை என்றும் பார்வையிட்ட உடன் அவர்கள் திரும்பியதாகவும் பின்னர் கொக்குப்படையான் பகுதியில் அவர்கள் குழுமி இருந்ததாகவும் பின்னர் முசலி மற்றும் புதுவெளி மீள்குடியேற்றக் கிராமத்தில் சூழ்ந்து கொண்டதாகவும் இதனால் அப்பகுதி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒரு வித பதட்ட நிலையில் காணப்பட்டதாகவும், வந்தவர்கள் முஸ்லிம் பிரதேசங்களில் 'அப்பய பூமி'  என்ற பெயர்ப்பலகைகளை இடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள இருந்தபோதிலும் அவர்களால் மேற்படி முஸ்லிம் மீள்குடியேற்ற பகுதிக்குள் அரச மரக் கன்றுகளை நாட்டியதாகவும் இதன் காரணமாக சிலாவத்துறை பிரதேசச் செயலகப் பகுதி மக்களை பிக்குகள் நிற்கும் பகுதிகளுக்குள் செல்ல விடாது பொலிஸார் தடை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அவர்கள் வந்த வாகனங்களில் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதி ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,,,,

அவர்கள் புத்தர் சிலைகளை வைப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவும் இருக்கலாம் என்றாலும் மீள்குடியேறிய மக்களை அப்பகுதியிலிருந்து விரட்டும் செயற்பாடுகளாகவே ,இதனை நோக்கப்படுகின்றது என்றார்.

இவ்வாறு இனவாத அமைப்புக்கள் பாதுகாப்புடன் சண்டித்தனமாக படையெடுத்து வருவதால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது பதட்ட நிலைமைகளுக்கு உள்ளாவதாகவும், பொலிஸார் வருபவர்களுக்கு பாதுகாப்புக் கொடுப்பதால் பொதுமக்கள் பொலிஸாருடன் முரண்பட வேண்டிய நிலைமைகள் ஏற்படுவதாகவும் இச்செயற்பாடுகள் ஒரு மனித உரிமை மீறலாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிப்பதுடன் இதனை ஜனாதிபதி தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தேவையற்றவர்களின் பிரசன்னங்களைக் குறைத்து மக்களை அமைதியாக வாழ விடுமாறு அப்பகுதி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பிக்குகளின் வருகையால் முசலி பிரதேசச் செயலாளர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாகவும் இந்நிலமைகள் காரணமாக முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் இயல்பு வாழ்க்கைக்க பாதீக்கப்பட்டதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.











வில்பத்து சரணாலய பகுதிக்குள் நுழைந்த பிக்குகள்- முசலியில் பதற்றம்(படங்கள் இணைப்பு) Reviewed by NEWMANNAR on May 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.