
பிரபாகரன் என்ற காரணி இருந்தமையினாலே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடந்த நான்கு முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரவித்துள்ளார்.
பாணந்துரை, கெஸ்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பிரபாகரன் என்ற காரணி இருக்கவில்லை அதனாலே நாங்கள் தோல்வியுற்றோம். முன்னாள் ஜனாதிபதியுடன் மீண்டும் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை வெற்றி பெற செய்வதற்கான நடவடிக்கை குறித்து எங்கள் கட்சிகாரர்களே கதைத்துக்கொண்டுள்ளார்கள்.
மேலும் இரண்டு வருடகாலங்கள் இருந்த போதிலும் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானம் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி தோல்வியுற்றார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பாதுகாத்துக்கொண்டு மீண்டும் வெற்றியினை நோக்கி செயற்படுவதற்கு அவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டவர்களால் முடியாது.
அதனை எங்களால் மாத்திர மேற்கொள்ள முடியும். நாங்கள் வாழ்வது இலங்கையில், இந்த நாட்டில் சிங்களம், தமிழ் முஸ்லிம், பேகர் போன்று பல்வேறு இனத்தவர்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் பல்வேறு மதங்களை பின்பற்றுகின்றனர்.
மதம், ஜாதி, பேதம் இன்றி இந்நாட்டை முன்னொக்கி கொண்டு செல்ல வேண்டும். சிங்கள மக்களின் வாக்குகளில் பாணந்துரை பிரதேச சபையின் தலைவராக முஸ்லிம் ஒருவரால் முடிந்தது போன்று தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளின் ஜனாதிபதி பதவி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்தமையும் பிரச்சினையல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment