அண்மைய செய்திகள்

recent
-

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நியதிச்சட்டம் விரைவில்: கல்வி அமைச்சர் த.குருகுலராஜா


கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களை பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

முன்பள்ளி இணைப்பாளர் கௌசலா தலைமையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.


இதில் முன்பள்ளி ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்டறிந்த கல்வி அமைச்சர் தனது உரையில்,

வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் காணப்படுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களின் சேவைகளையும் அவர்களின் அர்ப்பணிப்புக்களையும் நாம் அறிவோம்.

போர்க்காலத்திலும் அகதி முகாம்களிலும் கூட அதன் பின்னர் மீள்குடியேற்றத்தின் பின்னர் முன்பள்ளி ஆசிரியர்கள் குறைந்தளவு வேதனங்களுடனும் வேதனங்கள் இன்றியும் கற்பித்து வருவதை நாம் உணர்ந்துகொண்டதன் அடிப்படையில்,

முன்பள்ளி ஆசிரியர்களின் நியமனங்கள் வேதனம் தொடர்பான நிரந்தர தீர்வுகளுக்கான ஒரு நியதிச்சட்டத்தை எதிர்வரும் 9ம் திகதி வடக்கு மாகாண சபையில் சமர்ப்பித்து அதை விவாத்துக்கு உட்படுத்தி முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்கள் வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசாங்கத்துக்கு விடயங்களை தெரிவிக்க உள்ளோம்.

இராணுவத் துணைப்படை நிர்வாகத்தின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்கள் இயங்கமுடியாது.அது துணைப்படையே தவிர முன்பள்ளி ஆசிரியர்கள் அல்ல.

ஆகவே முன்பள்ளி ஆசிரியர்கள் என்ற கட்டமைப்புக்குள் வரவேண்டுமாயின் அவர்கள் கல்வி நிர்வாகத்தின் கீழ்தான் வரவேண்டுமென்பதுதான் நியதி.

எனவே அதற்கான நடவடிக்கைகள் எம்மால் மேற்கொள்ளப்படுவதுடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நிரந்தரமான தீர்வுகள் நியதிச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பு கிடைக்கும் என தெரிவித்தார்..

இந்தச்சந்திப்பின்போது பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளர் பொன்.காந்தன், மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

- See more at: http://www.tamilwin.com/show-RUmtyGTZSUgt4G.html#sthash.ms2PYs2s.dpuf
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நியதிச்சட்டம் விரைவில்: கல்வி அமைச்சர் த.குருகுலராஜா Reviewed by NEWMANNAR on June 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.