இன்று உலக சுற்றாடல் தினம்
7 பில்லியன் மக்களைக் கொண்ட இந்த உலகை பாதுகாப்போம்” என்பதே இந்த வருடத்தின் உலக சுற்றாடல் தின தொனிப்பொருளாகும்.
இயற்கையை பாதுகாத்து, சாதகமான சுற்றுப் புறச் சூழலை உருவாக்கி அதன்மூலம் சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றாடல் தினம் நினைவு கூறப்படுகின்றது.
1972 ஆம் ஆண்டு, ஐ.நாவின் மனித சுற்றாடல் மாநாடு ஆரம்பமான தினத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் உலக சுற்றாடல் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, 1973 ஆம் ஆண்டுமுதல் வருடாந்தம் உலக சுற்றாடல் தினம் நினைவு கூறப்படுகின்றது.
இலங்கையில் சுற்றாடல் தின கொண்டாட்டங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (05) பொலன்னறுவை மெதிரிகிரியவில் இடம்பெறவுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்தார்.
மக்களின் தவறான பாவனையால், சுற்றாடல் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதனை தடுத்துநிறுத்துவதற்கான உடனடி தேவை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும், அதனை ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் நிஹால் ரூபசிங்க கூறினார்.
இதேவேளை, சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு இன்றிலிருந்து எதிர்வரும் 08 ஆம் திகதிவரை சுற்றாடல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு, பல அபிவிருத்தித் திட்டங்களும், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இன்று உலக சுற்றாடல் தினம்
Reviewed by NEWMANNAR
on
June 05, 2015
Rating:

No comments:
Post a Comment