உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் டோனி: குதூகலத்துடன் புகழும் டிவைன் ஸ்மித்
இந்திய அணித்தலைவர் டோனி ஒரு நேர்மையான வீரர் என மேற்கிந்திய அணி வீரர் டிவைன் ஸ்மித் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் விளையாடும் அணிகளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே சிறந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஓய்வறையில் நாம் நிம்மதியாக இருக்கலாம். அனைத்து விதங்களிலும் நம்மீது அக்கறை இருக்கும்.
ஸ்டீபன் பிளெமிங் போன்ற ஒரு பயிற்சியாளர், சுரேஷ் ரெய்னா போல ஒரு நண்பர். இவையல்லாமல் அனைத்திற்கும் மேலாக எம்.எஸ். டோனி.
டோனியைப் பொறுத்தவரை யாரும் வாய்ப்புகள் தரவில்லை என்று குற்றம் காண முடியாது. அவர் நிறைய வாய்ப்புகளை வழங்குவார், பிறகு அந்த வீரர்தான் அதனை மேலே எடுத்துச் செல்ல வேண்டும்.
டோனி ஒரு நேர்மையான கிரிக்கெட் வீரர். உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர், சிந்திக்கும் மூளை படைத்தவர்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக விளையாட வேண்டும் என எப்போதும் வலியுறுத்துபவர்.
கடந்த இரண்டு தொடர்களாக டோனியின் அணித்தலைவர் பதவியை நெருக்கமாக கவனித்து வருகிறேன். அவற்றிலிருந்து பலவற்றை மனதில் எடுத்துக் கொண்டு எனது ஆட்டத்தில் அவற்றை உள்நுழைத்துள்ளேன்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதும், டோனியிடம் நிறைய உரையாடியதும் என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கியுள்ளது என்று பெருமை பொங்கும் குதூகலத்துடன் கூறியுள்ளார்.
உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் டோனி: குதூகலத்துடன் புகழும் டிவைன் ஸ்மித்
Reviewed by Author
on
June 17, 2015
Rating:

No comments:
Post a Comment