பாலுறவுக்கு உடன்பட்டால் மட்டுமே உணவு: ஹைத்தியில் ஐநா அமைதிப்படை நடத்திய அட்டூழியம்
ஹைத்தியில் நிவாரண பணியில் ஈடுப்பட்டிருந்த ஐநா அமைதிப்படை வீரர்கள் அந்நாட்டின் பெண்களிடம் பாலுறவுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வோம் என்று கூறி அவர்களிடம் உறவு வைத்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட அமெரிக்காவில் உள்ள ஹைத்தியில் ஏழை மக்களுக்கு தேவையான உதவிகளை கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் அளித்து வந்தனர்.
இந்த நிலையில் அமைதிக் குழு வீரர்கள் பண்டமாற்று உறவில் ஈடுபட்டதை ஐ.நா. கண்காணிப்புக் குழு கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, வட அமெரிக்காவில் உள்ள மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஹைத்தியில், ஐநாவின் அமைதிக் குழு பணியாற்றியபோது அங்கிருந்த பெண்களிடம் அவர்களுக்கு தேவையான உணவு, உடை, தண்ணீர், குழந்தைகளுக்கான வசதிகள் போன்றவற்றை பெறவேண்டுமென்றால் தங்களுடன் பாலுறவு கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை நாடான அங்கு கிராமப்புற பெண்களுக்கு உணவு, உறைவிடம், குழந்தைகளுக்கான தேவைகள், மருத்துவப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என எதுவும் இல்லை.
எனவே இதுபோன்ற தேவைகளை அளிப்பதற்கு மாறாக அந்தப் பெண்களிடம் உறவுகொள்ளும் வழக்கத்தை அமைதிக் குழுவினர் வைத்துள்ளனர். மேலும் செல்போன், நகை, பணம் உள்ளிட்ட பொருட்களையும் அங்குள்ள பெண்களுக்கு குழுவினர் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைத்தியில் 231 பெண்களிடம் மேற்பார்வை குழுவினர் நடத்திய ஆய்வின் மூலமாக இந்த தகவல் தெரியவந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்சமயத்தில் ஐ.நா. அமைதிப் படைக் குழுவில் உலகெங்கும் சுமார் 125,000 பேர் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலுறவுக்கு உடன்பட்டால் மட்டுமே உணவு: ஹைத்தியில் ஐநா அமைதிப்படை நடத்திய அட்டூழியம்
Reviewed by Author
on
June 11, 2015
Rating:

No comments:
Post a Comment