அண்மைய செய்திகள்

recent
-

7 வருடங்களாக ’கோமா’வில் இருக்கும் நபர்: கருணை கொலை செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்


பிரான்ஸில் 7 வருடங்களாக மருத்துவமனையில் கோமா நிலையில் இருக்கும் நபரை கருணை கொலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸில் உள்ள Reims நகரில் வசித்து வந்த Vincent Lambert(39) என்பவர் ஏழுவருடங்களுக்கு முன்னர் வாகன விபத்தில் சிக்கியதால் முடக்குவாதம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவருடைய உடல்நிலையில் ஏழு வருடங்களாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உணவு மற்றும் தண்ணீர் அனைத்தும் நரம்பு வழியாகவே செலுப்படுகிறது. விண்சென்டின் நிலையை பார்த்து மனதளவில் பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி மற்றும் சகோதரர்கள் அவரை மருத்துவர்கள் உதவியுடன் கருணை கொலை செய்ய தீர்மானித்தனர். இந்த விவாகரம் ஐரோப்பிய சட்ட திட்டங்களை மீறுகிறது என விமர்சனம் எழுந்ததும், அங்குள்ள உச்ச நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த நீதிமன்றம், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அவரை கருணை கொலை செய்வதால் சட்ட திட்டங்களை மீறுவதாக கருத முடியாது என தீர்ப்பளித்தது. ஆனால், விண்சென்டின் பெற்றோர்களுக்கு தங்களின் மகனை கருணை கொலை செய்ய விருப்பம் இல்லை எனக்கூறி ஐரோப்பிய நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனை நீதிபதிகள் விசாரணை செய்தபோது, சுயநினைவு இல்லாமல் கோமா நிலையில் பல வருடங்களாக இருப்பதை தனது கணவரும் விரும்ப மாட்டார். கருணை கொலை செய்வது தான் தனது கணவரின் விருப்பமாகவும் இருக்கும் என அவரது மனைவி Rachel வாதிட்டார். தற்போது அவருடைய விருப்பதை நிறைவேற்ற தான் மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளோம் என அவர் நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ஆதரித்த ஐரோப்பிய நீதிமன்றம் கோமாவில் உள்ள நபர் இனி குணமடைய வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறி இருப்பதை கருத்தில் கொண்டு, அவருக்கு வழங்கப்படும் உயிர் காக்கும் சிகிச்சைகளை நிறுத்தி விடுமாறு உத்தரவிட்டுள்ளது.
7 வருடங்களாக ’கோமா’வில் இருக்கும் நபர்: கருணை கொலை செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் Reviewed by Author on June 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.