

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக் கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கு சில்வர்ஸ்டார் மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் ஆரம்பமான இக்கூட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் பற்றியும் அதற்கான தமிழ் மக்களின் நிலைப்பாடு பற்றியும் பேசப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி மக்களது பிரச்சினைகளை நிறைவேற்றும் திறன்படைத்த ஒருவரை வலியுறுத்தி, அதனூடாக மக்களை வாக்களிக்கச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் நடக்கவிருக்கின்ற தேர்தல் எமது அரசியல் பாதையின் ஒரு முக்கியமான அங்கம் எனவும் புதிய பாராளுமன்றம் உருவாக்கப்பட்ட பின்னர் அதனூடாக புதியதொரு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொள்வதே எமது நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment