நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு எதிராக ரிட்மனு
நிதி மோசடி விசாரணை பிரிவு சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறும் அந்த பிரிவையும் அப்பிரிவை ஸ்தாபிப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலையும் வலுவற்றதாக்குமாறும் கோரி ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எல்லே குணவன்ச தேரர் மற்றும் பேராசிரியர் கலோ பொன்சேகா ஆகிய இருவருமே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த ரிட்மனுவை, இன்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளனர்.
பொலிஸ் கட்டளைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு முரணாக அந்த பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
ஆகையால், அந்த பிரிவில் உள்ள அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் விசாரணை சட்டரீதியானது அல்ல என்றும் மனுதாரரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மனுவில், பிரதிவாதியாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பிரதமரின் அனுமதியுடன் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப-குழுவினால் முன்னெடுக்கப்படும் விசேட முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இந்த விசேட பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, பிரதமரின் கீழுள்ள அமைச்சரவை உப-குழுவானது விசேட பொலிஸ் பிரிவின் பிரதிபொலிஸ் மா அதிபரினால் வழங்கப்படும் கட்டளையின் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுக்கிறது. இது நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு முரணானது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு எதிராக ரிட்மனு
Reviewed by NEWMANNAR
on
June 05, 2015
Rating:

No comments:
Post a Comment