
புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர்களை எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டார்.
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டதையடுத்து அதன்பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவித்து இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்து இன்று நீதிமன்றில் முற்படுத்தினர்.
குறித்த இருவரையும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
குறித்த சந்தேக நபர்கள் அரியாலை மற்றும் தாவடி பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும் வீடியோ ஒலிநாடாக்களைக் கொண்டே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment