புவி வெப்பமடைதலை உடனடியாக தடுக்க வேண்டும்: ஜி 7 உச்சிமாநாட்டில் உலக நாடுகள் வலியுறுத்தல்
அசுர வேகத்தில் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று ஜேர்மனியில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் உச்சிமாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜி 7 உச்சி மாநாடு ஜேர்மனியில் தொடங்கியது. இதில் புவி வெப்பமடைதலை கட்டுக்குள் வைக்க அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டது.
மேலும், நிலக்கரி போன்ற எரிபொருட்களை பயன்படுத்தாமல் நாட்டின் வருமானத்தை பெருக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.
சுற்றுசூழல் மாறுதல் தொடர்பாக ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கல் மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்கோஸ் ஹாலண்டி இருவரும் ஒருமித்த குரலில் மற்ற தலைவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும் வரும் 2050ஆம் ஆண்டுக்குபின் நிலகரி உள்ளிட்ட படிம எரிபொருள் பயன்பாட்டை 40 – 70 சதவீத குறைத்து கொள்ளவேண்டும் என்ற அரசாங்கங்களுக்கு இடையேயான சுற்றுசூழல் குழுவின் பரிந்துரையை சாத்தியப்படுத்த அனைத்து நாடுகளும் தங்களை ஈடுபடுத்திகொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2050ம் ஆண்டுக்கு பின் படிம எரிபொருள் பயன்பாட்டை முழுவதுமாக நிறுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக சில சுற்றுசூழல் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த மாநாட்டில் ரஷ்யா- உக்ரையின் விவகாரம், ஐ.எஸ் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவது, கிரீஸ் பொருளாதார நிலை ஆகியவை குறித்தும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதலை உடனடியாக தடுக்க வேண்டும்: ஜி 7 உச்சிமாநாட்டில் உலக நாடுகள் வலியுறுத்தல்
Reviewed by Author
on
June 10, 2015
Rating:

No comments:
Post a Comment