யாழில் 59 இராணுவ முகாம்கள் நீக்கம்

யாழ். மாவட்ட பாதுகாப்பிற்கு அவசியமான முகாம்களை மாத்திரம் வைத்துவிட்டு அம்மாவட்டத்தில் நடத்தி செல்லப்பட்ட 59 இராணுவ முகாம்கள் தற்போது வரையில் நீக்கப்பட்டுள்ளது என யாழ். பாதுகாப்பு படைகள் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏனைய பிரதேசங்களுக்கமைவாக யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இராணுவத்திற்கு கீழ் இருந்த 12 ஆயிரத்து 901 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் செல்லக்கூடிய வகையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் 59 இராணுவ முகாம்கள் நீக்கம்
Reviewed by Author
on
June 10, 2015
Rating:

No comments:
Post a Comment