அண்மைய செய்திகள்

recent
-

யாழில் இதுவரை 19159.38 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு : யாழ். மாவட்ட கட்டளை தளபதி


வடமாகாணத்தில் இராணுவத்தின் பிடியில்  இருந்த மக்களுக்கு சொந்தமான காணிகளில் இருந்து 19159.38 ஏக்கர்  காணிகள் மீள மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்தார்.



பலாலி பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில்,

யாழ் குடாநாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி சுமுகமாக வாழ்க்கை நடத்துகின்றனர். இனி பயங்கரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

இதுவரையில் 99.44 வீதமான மிதிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில பிரதேசங்களில் முக்கியத்துவத்துவ அடிப்படையில் மிதிவெடி அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மந்தகதியிலேயே மீள்குடியேற்றப்பணிகள் நடைபெறுகின்றன .

யாழில் அதிக எண்ணிக்கையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கிறேன்.

யாழில் அதிக எண்ணிக்கையான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலில் எதுவிதமான உண்மையும் இல்லை. தேவையான எண்ணிக்கையானோர் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் இதுவரை 19159.38 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு : யாழ். மாவட்ட கட்டளை தளபதி Reviewed by Author on June 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.