தலைமன்னார் ஸ்ரேசன் கடற்கரையில் கரை ஒதுங்கிய 5½ அடி உயரம் கொண்ட பழைமை வாய்ந்த மரத்தினால் செதுக்கப்பட்ட மனித உருவம் கொண்ட சிலை.-Photos
தலைமன்னார் ஸ்ரேசன் பழைய பாலத்தடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் இன்று(11) வியாழக்கிழமை காலை மரத்தில் செதுக்கப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த மனித உருவம் கொண்ட சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று(10) புதன் கிழமை மாலை குறித்த சிலை கரை ஒதுங்கிய நிலையில் மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை காலை தலைமன்னார் ஸ்ரேசன் கிராம அலுவலகர் குறித்த பகுதிக்குச் சென்று குறித்த சிலையை மக்களின் ஒத்துழைப்புடன் மீட்டு தனது அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இவ்விடையம் தொடர்பில் குறித்த கிராம அலுவலகர் மன்னார் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
மீட்கப்பட்ட மரத்தினால் செதுக்கப்பட்ட குறித்த மனித உருவம் கொண்ட சிலை சுமார் 5 ½ அடி உயரம் கொண்டதாகவும்,மிகவும் பழைமை வாய்ந்ததாக காணப்படுவதோடு அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினையடுத்து குறித்த சிலை கடலில் கலக்கப்பட்ட நிலையில் தலைமன்னார் ஸ்ரேசன் கடற்கரையில் கரையோதுங்கியிருக்க முடியும் என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைமன்னார் ஸ்ரேசன் கடற்கரையில் கரை ஒதுங்கிய 5½ அடி உயரம் கொண்ட பழைமை வாய்ந்த மரத்தினால் செதுக்கப்பட்ட மனித உருவம் கொண்ட சிலை.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 11, 2015
Rating:
No comments:
Post a Comment