
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி 12 இலங்கை பணியாளர்கள் கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்
தனியார் நிறுவனம் ஒன்றில் இவர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்
இந்தநிலையில் அவர்கள் நிறுவன முகாமைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு கடந்த வாரம் நாடு கடத்தப்பட்டனர் என்று இலங்கையின் அரச பத்திரிகை தெரிவித்துள்ளது
அல்-சாலியாவில் பணியாளர் தங்குமிடத்தில் தீப்பரவிய சம்பவத்தை அடுத்தே இலங்கை பணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நாடு திரும்ப விரும்பும் பணியாளர்களுக்கு உரிய வசதிகள் செய்துக்கொடுக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்திருந்தது
எனினும் அதுவரை கடமைகளுக்கு திரும்பவேண்டும் என்றும் நிறுவனம் கேட்டிருந்தது
எனினும் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையிலேயே இலங்கைப் பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
-
No comments:
Post a Comment