அண்மைய செய்திகள்

recent
-

25 வருடங்களுக்கு பின் சொந்த மண்ணுக்கு திரும்பிய பூரிப்பில் வசாவிளான் மக்கள்











யாழ்.வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, 25 வருடங்களுக்கு பின்னர் மக்களுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பிய பூரிப்பில் மகிழ்வோடு பூசை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். வசாவிளான் தெற்கு பகுதி கடந்த 1990 ம் ஆண்டு தொடக்கம் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த ஞான வைரவர் ஆலயமும் கடந்த பல வருடங்களாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் ஆட்சிமாற்றத்தின் பின்னர் குறித்த ஆலயத்திற்கு வருவதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசன் ஆகியோர் வருகை தந்து அனுமதி மறுக்கப்பட்டமையினால் திரும்பியிருந்தனர். இதனையடுத்து வடமாகாண முதலமைச்சர் சீ்.வி்.விக்னேஸ்வரன் யாழ்.மாவட்ட படைத்தளபதி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தின்படி இன்றைய தினம் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காடுகளாக மாறியிருக்கும் தங்கள் வீடுகளை மக்கள் கண்ணீருடன் ஆவலாக பார்வையிட்டனர். இந்நிலையில் தமது சொந்த நிலங்களில் விரைவாக மீள்குடியேற வேண்டும் இதற்காகவே இந்த நாளில் பொங்கல் நடத்துகின்றோம். நீண்ட நாட்களுக்கு பின்னர் சொந்த மண்ணுக்கு திரும்பியது சந்தோஷம் என மக்கள் கூறிக்கொண்டனர்.
25 வருடங்களுக்கு பின் சொந்த மண்ணுக்கு திரும்பிய பூரிப்பில் வசாவிளான் மக்கள் Reviewed by Author on June 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.