மாணவி தூக்கிட்டு தற்கொலை : அட்டனில் சம்பவம்
அட்டன் மல்லியப்பு சந்திப்பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி பயின்று வந்த உதயகுமார் பிரவீனா (19 வயது) என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலேயே குறித்த மாணவி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த மாணவியின் தாய் தனது இரண்டாவது மகளை பாடசாலையிலிருந்து அழைத்து வரச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மரண விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலத்தை பிரேதம் மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளைஇ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு இன்று பிறந்ததினம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி தூக்கிட்டு தற்கொலை : அட்டனில் சம்பவம்
Reviewed by Author
on
June 03, 2015
Rating:
Reviewed by Author
on
June 03, 2015
Rating:

No comments:
Post a Comment