மன்னார் தள்ளாடி-வங்காலை பிரதான வீதியில் விபத்து- குடும்பஸ்தர் ஒருவர் பலி.-Photos
மன்னார் தள்ளாடி சந்தியில் இருந்து வங்காலைக்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்று(5) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சிறுநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் வங்காலை பகுதியில் மாடு மேய்த்து விட்டு தள்ளாடி பிரதான வீதியூடாக சிறுநாவற்குளத்தில் உள்ள தனது வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது குறித்த குடும்பஸ்தருக்கு பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த கெப் ராக வாகனத்துடன் மோதி குறித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை(5) மாலை குறித்த குடும்பஸ்தர் தனது கடமையினை முடித்துக்கொண்டு வீட்டிற்கு தேவையான அரிசி உற்பட பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு துவிச்சக்கர வண்டியில் வங்காலை பிரதான வீதியூடாக சென்று கொண்டிருந்தார்.
இதன் போது பொதி செய்யப்பட்ட ஐஸ் கட்டிகளை ஏற்றியவாறு வங்காலை நோக்கி சிறிய ரக கெப் வாகனம் சென்று கொண்டிருந்த போது துவிச்சக்கர வண்டியுடன் சென்றவர் மீது மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தின் போது துவிச்சக்கர வண்டியில் சென்ற குறித்த குடும்பஸ்தரான வயோதிபர் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவ்வீதியல் பயணித்தவர்களின் உதவியுடன் குறித்த சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்றிக்கோ உற்பட பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதோடு விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் கெப் ரக வாகனத்தின் சாரதியையும் மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் தள்ளாடி-வங்காலை பிரதான வீதியில் விபத்து- குடும்பஸ்தர் ஒருவர் பலி.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 06, 2015
Rating:

No comments:
Post a Comment