முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மறிச்சுக்கட்டியில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்.-Photos
மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சர்ச்சையினை அடுத்து தடைப்பட்டுள்ள வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி இரண்டு இலட்சம் கையொழுத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கை இன்று(7)ஞாயிற்றுக்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மறிச்சுக்கட்டி கிராமத்தில் வைத்து கையொழுத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-இடம் பெயர்ந்துள்ள வடபகுதி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஆதரவுக் கையொழுத்து பெறும் மற்றுமொரு நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை யும் ஆ தொழுகையினைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியிலுள்ள பள்ளிவாசல்களில் இடம் பெறவுள்ளது.
-இன்றைய குறித்த நிகழ்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன்,பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,வடமாகாண சபை உறுப்பினர்கலான றிப்கான் பதியுதீன்,கே.ஜெயதிலக்க,முசலி பிரதேச சபையின் முன்னால் தலைவர் எம்.எஹியான் மற்றும் முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள்,அரசியல் பிரமுகர்கள்,இஸ்ஸாமிய மதத்தலைவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கையெழுத்துக்களை வைத்து ஆரம்பித்தனர்.
-சேகரிக்கப்படும் கையெழுத்துக் கோரிக்கைகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மறிச்சுக்கட்டியில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 07, 2015
Rating:
No comments:
Post a Comment