கிரீஸ் நாட்டு வங்கிகள் மூடப்பட்டதால் ஆசிய பங்குச் சந்தைகளில் சரிவு
கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டு, பணத்தை வங்கிகளிலிருந்து எடுப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கிரேக்கத்திற்கான அவசர கால நிதியை நீடிக்க முடியாது என்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவை தொடர்ந்து கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டன.
இன்றைய நாள் ஆரம்பத்தில் பெரும்பாலான ஐரோப்பிய வங்கிகள் கிட்டதட்ட 4% வீழ்ச்சியடநை்து காணப்பட்டது. எனினும் சிறிது நேரம் சிறு முன்னேற்றம் காணப்பட்டது. முன்னதாக, ஆசிய பங்குச் சந்தைகளும் கணிசமாக வீழ்ச்சிகண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் முழுவதும் கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பணம் எடுக்கும் இயந்திரங்களும் இன்று நண்பகல் வரை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்கள் இயங்க ஆரம்பித்த பிறகும் ஒரு நாளைக்கு 60 யுரோக்கள் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வெளிநாட்டு வங்கி அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு இந்த கட்டுப்பாடு கிடையாது.
கிரீஸ் நாட்டு வங்கிகள் மூடப்பட்டதால் ஆசிய பங்குச் சந்தைகளில் சரிவு
Reviewed by NEWMANNAR
on
June 29, 2015
Rating:

No comments:
Post a Comment