
நாளை திங்கட்கிழமை அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்.
பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பினருக்கு இந்த அமைச்சரவைக் கூட்டம் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில், 20ம் திருத்தச் சட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் உத்தேச திருத்தச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் சட்டம் விளக்கம் கோரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் எழக்கூடுமென அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment