
இந்த வார இறுதியில் இலங்கை அரசாங்கமும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தரப்பு செய்திகளின்படி லண்டனுக்கு சென்றுள்ள இலங்கையின் அமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த ஆங்கில செய்தித்தாள் இலங்கையில் வெளியுறவுத்துறை அமைச்சை வினவியபோது, வெளிநாடுகளில் வாழும் இலங்கையின் பல்வேறு இனக்குழுக்களின் புலம்பெயர்ந்தோர் குழுக்களுடன் நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழர் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேசத்தயார் என்று லண்டனில் உள்ள உலக தமிழர் பேரவை கடந்த வாரத்தில் அறிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை தென்னாபிரிக்க அரசாங்கத் தரப்பும் உலக தமிழர் பேரவையுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது.
மங்கள சமரவீர - உலக தமிழர் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு
லண்டனில் உள்ள இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்புடன் இலங்கை அரசாங்கம் முதல் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இதன்படி வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நாளை லண்டனில் உலக தமிழர் பேரவை பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் தென்னாபிரிக்க அரசசார்பற்ற அமைப்பு ஒன்றின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தித்தாளான சண்டே ஒப்சேவர் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கையில் உள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஜியோப் டொய்ட்ஜ்ஜை தொடர்புக்கொண்ட போது இது அரசாங்கத்துக்கும் மற்றும் ஒரு அரசாங்கத்துக்கும் இடையிலான திட்டம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment