கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர் கைது
கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவர் அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 400 கிராம் கேரள கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
புளியங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர் கைது
Reviewed by NEWMANNAR
on
June 22, 2015
Rating:

No comments:
Post a Comment