இளைஞர் யுவதிகளை சமூக சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்க மன்னார் பேசாலையில் இடம் பெற்ற விழிர்ப்புணர்வு நிகழ்வு-photos
இளைஞர் யுவதிகளை சமூக சீர்கேடுகளில் இருந்து பாதுகாத்து அவர்களை வலுப்படுத்தும் வகையில் விசேட விழிர்ப்புணர்வு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) இரவு மன்னார் பேசாலையில் இடம் பெற்றது.
திருமறைக் கலாமன்றமும்,கெயார் நிறுவனமும் இணைந்து குறித்த விழிர்ப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
மன்னார்,மாந்தை மேற்கு,நானாட்டான் ஆகிய மூன்று பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் உள்ள இளைஞர் யுவதிகளை உள்ளடக்கி 'கலைப்பொழுது' எனும் தொணிப்பொருளில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,மற்றும் மூத்த கலை இலக்கியவாதிகள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வானது சமூக சீர்கேடுகளில் இருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாத்து வலுவூட்டும் ஒரு நிகழ்ச்சித்திட்டமாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர் யுவதிகளை சமூக சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்க மன்னார் பேசாலையில் இடம் பெற்ற விழிர்ப்புணர்வு நிகழ்வு-photos
Reviewed by NEWMANNAR
on
June 22, 2015
Rating:
No comments:
Post a Comment