மன்னார் மாவட்டத்தில் மீனவர்களின் கடற்றொழில் நடவடிக்கைகள் பாதிப்பு.-Photos
மன்னார் மாவட்டத்தில் தற்போது கடற்றொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்து வருவதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கரையோரப்பகுதிகளில் கடந்த மே மாதம் முதல் பருவக்காற்று மிக வேகமாக வீசிவருகின்றமையினால் மீனவர்களின் கடற்தொழில் நடவடிக்கைகள் பாதீக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளாந்தம் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த பருவக்காற்றை மீனவர்கள் சோளக்காற்று என கூறுகின்றனர்.குறித்த பருவக்காற்று மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான சுமார் 06 மாதங்கள் வரை கடல் சார் கரையோரப்பிரதேசங்களில் வீசும்.
இதனால் குறித்த 06 மாத காலங்களிலும் மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகள் பாதிப்படையும்.
தற்போது குறித்த பருவக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் மீனவர்கள் எதிர்வு கூறுகின்றனர்.
இதனால் ஆழ்கடலுக்குச் செல்வதை குறைத்து கரவலை தொழிலை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் மீனவர்களின் கடற்றொழில் நடவடிக்கைகள் பாதிப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 22, 2015
Rating:
No comments:
Post a Comment