ஜொன்டியின் பயிற்சியளிப்பில் திருப்தி : சிதத் வெத்தமுனி

தென்னாபிரிக்கக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை அணி வீரர்களுக்கு களத்தடுப்பு பயிற்சியளித்தமை எமக்கு பூரண திருப்தியளிக்கிறது. அதேபோல் வீரர்களும் புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொண்டனர் என்று இலங்கைக் கிரிக்கெட்டின் தலைவர் சிதத் வெத்தமுனி தெரிவித்தார்.
இலங்கைக் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்இ ஜொன்டி ரோட்ஸ் எமது வீரர்களுக்கு பயிற்சியளிக்க முன்வந்தமைக்கு அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேநேரம் அவரின் பயிற்சியின் மூலம் எமது வீரர்களுக்கு புதிய அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. இது ஆரோக் கியமான விடயமும் கூட. பயிற்சியின்போது நான் எமது வீரர்களைச் சந்தித்துப்பேசினேன். அவர்களும் ஜொன்டியின் பயிற்சிகளை விரும்புவதாகத் தெரிவித்தனர்.
ஜொன்டி மட்டுமல்லாது எதிர்காலத்தில் இன்னும் பலகிரிக்கெட் ஜாம்பவான்களை வர வழைத்து குறுகிய கால பயிற்சிகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
ஜொன்டியின் பயிற்சியளிப்பில் திருப்தி : சிதத் வெத்தமுனி
Reviewed by Author
on
June 10, 2015
Rating:

No comments:
Post a Comment